விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலின் இரண்டு புதிய மைல்கல் !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே கட்டமைத்த INS VIKRANT விமானந்தாங்கி போர் கப்பல் முழுமையான செயல்பாட்டை துவங்கும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கிய உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஹெலிகாப்டரான MH60- ROMEO கொச்சி INS GARUDA கடற்படை வான் தளத்தில் இருந்து புறப்பட்டு

முதல்முறையாக தரையிறங்கி சில வீரர்களை இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் கொச்சி நோக்கி பறந்து சென்றது இதன்மூலம் விக்ராந்த் கப்பலின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்திறன் மற்றும் கண்காணிப்பு திறன்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்றால் மிகையாகாது.

அதே போல் சில நாட்கள் முன்னர் இரவு நேரத்தில் இந்திய கடற்படை Mig – 29K போர் விமானம் ஒன்று விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் தரையிறங்கியது, இதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.