இனி அனைத்து ராணுவ பயிற்சிகளிலும் முப்படைகள் கூட்டாக பங்கேற்பு ஒருங்கிணைப்பு பணியில் அடுத்த கட்டம் !!
இந்தியாவின் முப்படைகளிலும் தரைப்படையில் 7, விமானப்படையில் 7 கடற்படையில் 3 என சுமார் 17 வெவ்வேறு வகையான கட்டளையகங்கள் உள்ளன அவற்றை அந்தந்த படைகளை சேர்ந்த மூன்று நட்சத்திர அந்தஸ்திலான அதிகாரிகள் வழிநடத்தி வருகின்றனர் இவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக CDS எனப்படும் கூட்டுபடை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே உள்ள அந்தமான் ஒருங்கிணைந்த கட்டளையகத்தை போன்று இனி இந்த17 கட்டளையகங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு 1, கிழக்கு எல்லைக்கு 1, வடக்கு எல்லைக்கு 1 தெற்கில் 1, வான் பாதுகாப்புக்கு 1, போக்குவரத்து மற்றும் சப்ளைக்கு 1 என கூடுதலாக ஆறு கட்டளையகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் முப்படைகளின் அனைத்து தளவாடங்களும் வைக்கப்படும்.
இதற்கான முதற்கட்டமாக மூப்படைகளும் தங்களது அதிகாரிகளை மற்ற படைகளில் பணியமர்த்தும் பணிகளை துவக்கி உள்ள நிலையில் இனி நடைபெற உள்ள அனைத்து ராணுவ பயிற்சிகளிலும் முப்படைகளும் இணைந்தே பங்கு பெறும் என்ற அறிவுப்பும் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய விமானப்படையின் வழக்கமான வாயு ஷக்தி போர் பயிற்சி மேற்குறிப்பிட்ட விதமாக நடத்தப்படும் என கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான் அறிவித்துள்ளார்.
இதற்கான பணிகளை முப்படைகளையும் தொடர்பு கொண்டு அவரது கீழ் செயல்படும் ராணுவ விவகாரங்கள் துறை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சைபர் போர்முறை, விண் போர்முறை மற்றும் சிறப்பு படை கட்டளையகங்கள் இதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.