அருணாச்சல் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள இந்திய-திபத் எல்லைப் பகுதியில் சீன இராணுவத்தால் படையில் இணைக்கப்பட்ட திபத்தியர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிஉயர பகுதியில் சீன இராணுவத்திற்கு துணையாக இந்த திபத்தியர்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
2020 இந்திய சீன வீரர்கள் மோதலுக்கு பிறகு அதிஉயர பகுதியில் தொடர்ந்து பணியாற்ற சீனாவிற்கு இந்த திபத்தியர்களின் உதவி தேவையாக இருந்தது.எனவே திபத்தியர்களை சீனா படையில் இணைக்கத் தொடங்கியது.தற்போது சீன வீரர்களுடன் ரோந்து பணியில் இந்த திபத்தியர்களும் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிஉயர மலைப் பகுதியில் சீன வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.2020 மோதலின் போது திபத்தியர்களை கொண்ட இந்தியாவின் சிறப்பு முன்னனி படைப் பிரிவு மிக அற்புதமாக செயல்பட்டு கைலாஷ் மலைப் பகுதியில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியது நாம் அறிந்ததே.
திபத்தில் இருந்து வீட்டிற்கு ஒருவரை இராணுவத்தில் இணைத்து அவரை சீனாவிற்கு விசுவாகமாக மாற்றி செயல்பட வைக்க வேண்டும் என சீனத்தலைமை இராணுவ கமாண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.