தேசிய பேரிடர் மீட்பு படைக்கு முதல் தகவல் அளித்த தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் !!

  • Tamil Defense
  • June 4, 2023
  • Comments Off on தேசிய பேரிடர் மீட்பு படைக்கு முதல் தகவல் அளித்த தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் !!

BSF எல்லை பாதுகாப்பு படை வீரர் திரு. வெங்கடேஷ் தற்போது மேற்கு வங்கத்தின் நாடியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள NDRF தேசிய பேரிடர் மீட்பு படையின் 2ஆவது படையணியில் பணியாற்றி வருகிறார்.

இவர் விடுமுறைக்காக கோரமண்டல் ரயிலில் வந்த போது விபத்து ஏற்பட்டது, உடனடியாக வாட்சாப் மூலமாக தனது NDRF படை அணிக்கு தகவல் தெரிவித்து, இருப்பிடம் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து 2ஆவது படையணியின் கட்டளை அதிகாரி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நிலைநிறுத்தபட்டுள்ள NDRF 3ஆவது படையணியின் கட்டளை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார் தொடர்ந்து அவர்கள் மாநில நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் திரு வெங்கடேஷ் அடுத்த நாள் வரை மீட்பு பணியில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார், இது பற்றி NDRF DIG மொஹ்சென் சாஹேதி கூறும்போது சீருடையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் NDRF வீரர் எப்போதும் பணியில் தான் இருப்பார் என கூறியுள்ளார்.