2020ஆம் ஆண்டு இந்திய டாங்கி படையை சமாளிக்க முடியாமல் திணறிய சீனா வெளியான தகவல் !!

  • Tamil Defense
  • June 1, 2023
  • Comments Off on 2020ஆம் ஆண்டு இந்திய டாங்கி படையை சமாளிக்க முடியாமல் திணறிய சீனா வெளியான தகவல் !!

கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய தரைப்படையின் டாங்கி படையை சமாளிக்க முடியாமல் சீன தரைப்படை மிகவும் கடுமையாக திணறிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரிக்கு அருகே சீன தரைப்படையின் Synthetic Division படைப்பிரிவின் Type88A ரக டாங்கிகள் நிறுத்தப்பட்டு இருந்தன உடனடியாக இந்திய தரைப்படை தனது மூன்றாம் தலைமுறை T-90S பிரதான டாங்கிகளை அந்த பகுதியில் களமிறக்கியது.

இதை தொடர்ந்து ஓங்கியிருந்த சீனாவின் நிலை தலைகீழாக மாறியது இதனை தொடர்ந்து மிகவும் தொலைவில் உள்ள கான்சூ மாகாணத்தில் உள்ள ஜியாயுவகுவான் நகரில் இருந்து 76ஆவது தரைப்படை பிரிவின் 62ஆவது பிரிகேடின் மூன்றாம் தலைமுறை Type-99A ரக டாங்கிகளை சீனா பாங்காங் ஏரி பகுதிக்கு நகர்த்தியது.

இது மிக மிக கடினமான செயலாகும் இதற்கு அதிக காலம் தேவைப்படும் அந்த வகையில் சீன தரைப்படை இந்திய தரைப்படையை சமாளிக்க திணறிய தகவல்கள் கசிந்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.