ஈரான் சவுதி ஒமன் கூட்டு கடற்படை ?? கத்தார் ஊடகம் செய்தி வெளியீடு !!

கத்தார் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனமான அல் ஜாதீத் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் கூட்டாக கடற்படை கூட்டணி ஒன்றை ஒருவாக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தி உலக அரசியல் அரங்கிலும், மத்திய கிழக்கிலும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் சீனாவின் ஒருங்கிணைப்பில் இது நடைபெறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பெர்சிய வளைகுடா பகுதி தான் உலகின் 50% அதிகமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது மேலும் கணிசமான அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் இங்கு நடைபெறுகிறது இந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறைகூவல் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.