கட்டுபாட்டு அதிகாரியை கொன்ற அமெரிக்க ராணுவத்தின் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா விமானம் !!
சமீபத்தில் இங்கிலாந்தின் Royal Aeronautical Society நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிரப்பட்டுள்ள உண்மை சம்பவம் தொடர்பான கதை ஒன்று உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அமெரிக்க விமானப்படை AI Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா விமானம் ஒன்றின் செயல்பாட்டை கணிணியில் செயல்படுத்தி சோதனை நடத்தியது.
சிமுலேட்டர் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது ஒரு இலக்கை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கவும் இதை யார் தடுக்க முயன்றாலும் அவர்களையும் தாக்கும் விதமாக அதற்கு கட்டளை கொடுக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் எதிரி நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்கும் நோக்கத்தோடு சென்ற அந்த ட்ரோன் ஒரு சில இலக்குகளை அழிக்க தயாரான போது கட்டுபாட்டு அதிகாரி அதை நிறுத்த கட்டளை பிறப்பித்ததும் அவரை தடையாக கருதி அவரை ட்ரோன் தாக்கி கொன்றது.
இதுபற்றி அமெரிக்க விமானப்படையின் AI அமைப்புகள் சோதனை மற்றும் AI நடவடிக்கைகள் தலைவருமான கர்னல் டக்கர் சின்கோ ஹேமில்டன் கூறும்போது அந்த ட்ரோனுக்கு கட்டுபாட்டு அதிகாரியை கொல்லகூடாது என உத்தரவுகள் இருந்தாலுப் வேறு வழியை கண்டுபடித்து தாக்கி அழித்துள்ளது எனவும்
அந்த வகையில் தனக்கு கட்டுபாட்டு அதிகாரி கட்டளை அனுப்ப உதவும் தகவல் தொடர்பு கோபுரத்தை முதலில் அழித்தது ஆகையால் அதற்கு இப்போது கட்டமைகள் வராது பின்னர் கட்டுபாட்டு அதிகாரியின் இருப்பிடத்தின் மீது தாக்குதல் நடத்தி அழித்தது என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது செயற்கை நுண்ணறிவு திறன் அமெரிக்க திறன் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றார் அதே நேரத்தில் அதன் திறன்களை பற்றிய தனது கவலைகளையும் வெளிபடுத்தினார்.
அமெரிக்க விமானப்படை தனது F16 ரக போர் விமானம் ஒன்றை செயற்கை நுண்ணறிவு திறனால் இயக்கப்பட கூடியதாக உருவாக்கி சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.