முக்கிய காலிஸ்தான் பயங்கயவாதி இங்கிலாந்தில் மர்ம மரணம்; ரா நடவடிக்கையா ??

இங்கிலாந்தில் வசித்து வந்த முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியும் KLF – Khalistan Liberation Force காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவனுமான அவ்தார் சிங் காண்டா அங்கு மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்தார் சிங் காண்டா சில மாதங்கள் முன்னர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய கொடியை அவமதித்து அத்துமீறியதில் முக்கிய பங்கு வகித்து அதற்காக கைது செய்யப்பட்டவன் மேலும் இங்கிலாந்தில் உள்ள குருத்வாராவில் குண்டு செய்யும் பயிற்சி அளித்து வந்ததாக இவன் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது.

அதே போல் நமது நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் வாரிஸ் தே பஞ்சாப் என்கிற காலிஸ்தான் அமைப்பின் மூலமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த அம்ரீத்பால் சிங்கிற்கு காலிஸ்தான் கருத்துக்களை ஊட்டி வளர்த்தவன் அவ்தார் சிங் காண்டா ஆவான்.

அம்ரீத்பால் சிங் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் நடவடிக்கைகளுக்கு பயந்து பதுங்கிய போது அவனை 37 நாட்கள் இங்கிலாந்தில் இருந்து கொண்டே இந்தியாவில் பாதுகாத்து வைத்திருந்தான் தொடர்ந்து காவல்துறை காண்டாவின் அம்மா மற்றும் சகோதிரியை காவலில் வைத்தது.

தற்போது அவனது மரணம் மர்மமாக உள்ளது சில தகவல்கள் அவனுக்கு புற்றுநோய் இருந்ததாக கூறுகின்றன ஆனால் சில தகவல்கள் ஏதோ உணவு ஒவ்வாமை காரணமாக இறந்ததாக கூறுகின்றன அதே நேரத்தில் இந்திய உளவு அமைப்பான ரா RAW காண்டாவுக்கு ரகசியமாக விஷம் கொடுத்து கொன்றதாகவும் கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.