சீன அச்சுறுத்தல் எதிரொலி; இரண்டாம் தொகுதி கே9 வஜ்ரா வாங்க முடிவா ?

  • Tamil Defense
  • June 21, 2023
  • Comments Off on சீன அச்சுறுத்தல் எதிரொலி; இரண்டாம் தொகுதி கே9 வஜ்ரா வாங்க முடிவா ?

இந்தியாவின் லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனம் இரண்டாம் தொகுதி கே-9 வஜ்ரா வாகனங்களை வழங்க இந்திய இராணுவத்துடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலதிக 100 வஜ்ரா ஹொவிட்சர் துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த self propelled howitzers-கள் அதிஉயர நடவடிக்கைகளுக்கு ஏற்றவை ஆகும்.

தற்போது இந்திய இராணுவத்தில் 100 வஜ்ரா வாகனங்கள் உள்ளன.இவை எல்லையில் பல்வேறு பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளன.தென் கொரியாவிடம் பெற்று முதல் தொகுதி 100 வாகனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.முதலில் பாக் உடனான பாலைவன பகுதியில் நிலைநிறுத்த இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் தற்போது சீன எல்லையிலும் பயன்படுத்தப்படுகிறது.கல்வான் மோதலுக்கு பிறகு இந்த வாகனங்கள் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது அதிஉயர குளிர் பகுதிகளில் செயல்படுவதற்கு ஏற்ப சில புதிய மாற்றங்களை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் செய்துள்ளது.குளிரில் உடனடியாக வாகனத்தை செயல்படுத்துவது முதற்கொண்டு பல மாற்றங்களை செய்துள்ளது லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம்.