விரைவில் இந்திய கடற்படை விமானப்படைகளில் பணியமர்த்தப்படும் தரைப்படை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு பணிகள் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • June 3, 2023
  • Comments Off on விரைவில் இந்திய கடற்படை விமானப்படைகளில் பணியமர்த்தப்படும் தரைப்படை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு பணிகள் ஆரம்பம் !!

இந்தியாவின் முப்படைகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் துவங்கி உள்ளன, அந்த வகையில் விரைவில் இந்திய தரைப்படையின் 40 அதிகாரிகள் இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளில் பணியமர்த்தப்பட்டு அங்கு அவர்கள் தரைப்படையில் மேற்கொண்டு வந்த பணிகளை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது இப்படி பணியமர்த்தப்பட உள்ள அதிகாரிகள் மேஜர் மற்றும் லெஃப்டினன்ட் கர்னல் அந்தஸ்திலானவர்கள் எனவும் அதே போல் இந்திய தரைப்படையிலும் குறிப்பிட்ட அளவிலான கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் ஏவுகணை, ஆளில்லா விமானங்கள், போக்குவரத்து மற்றும் சப்ளை போன்ற பிரிவுகள் சார்ந்த படையணிகளில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் இதற்கு காரணம் இவற்றில் பயன்படுத்தப்படும் ஆயுத அமைப்புகள், ரேடார்கள், வாகனங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவை ஒரே போன்றது என்பதாகும்.