இந்த ஆண்டு நவம்பரில் முழு செயல்பாட்டு திறனை எட்டும் INS Vikrant !!

  • Tamil Defense
  • June 7, 2023
  • Comments Off on இந்த ஆண்டு நவம்பரில் முழு செயல்பாட்டு திறனை எட்டும் INS Vikrant !!

இந்திய கடற்படையின் புத்தம் புதிய விமானந்தாங்கி கப்பலான INS VIKRANT விக்ராந்த் முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கப்பலாகும், இந்த கப்பல் பற்றிய முக்கிய அறிவிப்பை கடற்படை தலைமை தளபதி வெளியிட்டுள்ளார்.

அதாவது தற்போது பல்வேறு வகையான சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள விக்ராந்த் கப்பலானது இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்கில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறியுள்ளார்.

மேலும் INS VIKRANT விக்ராந்த் போர் கப்பல் எதிர்காலத்தில் ஆந்திர மாநில தலைநகர் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள இந்திய கடற்படை தளத்தில் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார், தற்போது தற்காலிகமாக சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.