ஐநா அமைதிப்படையில் அதிக தியாகம் செய்த இந்திய வீரர்கள் !!

  • Tamil Defense
  • June 10, 2023
  • Comments Off on ஐநா அமைதிப்படையில் அதிக தியாகம் செய்த இந்திய வீரர்கள் !!

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் தரவுகளின்படி மல நாடுகளின் அமைதிப்படையினரை ஒப்பிடுகையில் அதிகளவில் பணியின் போது வீரமரணம் அடைந்தும் தியாகம் செய்தவர்களும் இந்திய வீரர்கள் தான் என தெரிய வந்துள்ளது.

1948 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமைதிப்படையில் சென்று அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிகளில் இந்திய ராணுவ மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபட்டு வருகின்றனர் இந்த பணிகளின் போது பலமுறை இந்திய வீரர்கள் சண்டைகள் மற்றும் கலவரங்களை எதிர்கொண்டு அவற்றை அடக்கி அமைதியை நிலைநாட்டி உள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்தியா அதிக அளவில் வீரர்களை ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மற்றும் காவல்படைகளுக்கு அனுப்பி உள்ளது மேலும் பொருளாதார ரீதியாக ராணுவ ரீதியாக காவல் ரீதியாக இந்தியா ஐநாவுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.

இந்திய வீரர்கள் தற்போது ஆஃப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு, ஆசியாவின் சில பகுதிகள், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.