இந்திய கடற்படை மற்றும் DRDO – Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் வருங்கால போர் கப்பல்களில் தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
அதாவது DRDO தனது ERADS – Extended Range Air Defence System தொலைவு நீட்டிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு என்ற திட்டத்தின் கீழ் இரண்டு வெவ்வேறு ஏவுகணைகளை தயாரித்து வருகிறது அவற்றை இந்திய கடற்படை தனது வருங்கால போர் கப்பல்களில் இணைத்து பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் ERSAM – Extended Range Surface to Air Missile தொலைவு நீட்டிக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணையை தயாரித்து வருகிறது இது 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து போர் விமானங்கள் அல்லது அளவில் அவற்றை போன்ற இலக்குகளை தாக்கி அழிக்கும்.
இரண்டாவதாக ERADS திட்டத்தின்கீழ் XRSAM – Extra Long Range Surface to Air Missile அதாவது மிக நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை உருவாக்கப்பட உள்ளது இதிலும் 250 கிலோமீட்டர் மற்றும் 450 கிலோமீட்டர் செல்லக்கூடிய இரண்டு வெவ்வேறு ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளன.
250 கிலோமீட்டர் செல்லக்கூடிய ஏவுகணையை கொண்டு போர் விமானங்கள் மற்றும் அவற்றை போன்ற இலக்குகளையும், 400 கிலோமீட்டர் செல்லும் ஏவுகணையை கொண்டு AWACS கண்காணிப்பு – எச்சரிக்கை விமானங்கள், எரிபொருள் டேங்கர் விமானங்கள், கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவற்றை அழிக்க முடியும்.
400 கிலோமீட்டர் செல்லக்கூடிய XRSAM ஏவுகணைகளை விமானப்படை பிரதானமாக பயன்படுத்த உள்ளது கூடுதல் தகவல் ஆகும், மேற்குறிப்பிட்ட ஏவுகணைகளை தற்போது வடிவமைப்பு கட்டத்தில் உள்ள வருங்கால போர் கப்பல்களில் இணைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.
தற்போது இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை 90 கிலோமீட்டர் மட்டுமே செல்லக்கூடிய இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு LR – SAM Long Range Surface to Air Missile ஆகும், மேற்குறிப்பிட்ட ஏவுகணைகளை இணைப்பதன் மூலம் மேலும் ஒரு அடுக்கிலான நீண்ட தூர வான் பாதுகாப்பு வளையம் கப்பல்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.