உலக இராணுவ தளவாட ஏற்றுமதி நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு மிக வலுவான நாடாக மாற முடிவு செய்துள்ளது.இந்தியா தற்போது ஆயுதங்கள் ஏற்றுமதி செய்தாலும் குறைந்த மதிப்புடைய ஆயுதங்கள் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.போர்க்கப்பல்கள் போன்று அதிக மதிப்புடைய இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.இதற்காக கப்பல் கட்டும் துறையை மேம்படுத்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு நிர்வகிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தாமதமாக தளவாடங்களை டெலிவரி செய்யும் நிலையில் உள்ளன.இதை விரைவில் இந்தியா சரி செய்ய உள்ளது.மேலும் இந்த ஒப்பந்தங்களில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடலாம் என கூறியுள்ளது.
அரசு கப்பல் கட்டும் தளங்கள் டெலிவரி தாமதித்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்து சரியான நேரத்தில் கப்பல்களை டெலிவரி செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் வேண்டியுள்ளது.