இந்தியத் தயாரிப்பு தபாஸ் ஆளில்லா விமானம் மற்றுமொரு சாதனை

  • Tamil Defense
  • June 19, 2023
  • Comments Off on இந்தியத் தயாரிப்பு தபாஸ் ஆளில்லா விமானம் மற்றுமொரு சாதனை

கட்டுப்படுத்தப்பட்ட கட்டளை மாறுதல் தொடர்பான புதிய சாதனை ஒன்றை இந்தியத் தயாரிப்பு தபாஸ் ஆளில்லா விமானம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை இந்தியக் கடற்படை மற்றும் இந்தியாவின் டிஆர்டிஓ இணைந்து படைத்துள்ளன.

ஜீன் 16 அன்று ஆளில்லா விமானம் கடல் மட்டத்தில் இருந்து 20000அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது.

அதாவது தரைக்கட்டுப்பாட்டு மையத்தால் கட்டுப்படுத்தப்பட்டு விமானம் தனது பறத்தலை தொடங்கிய பிறகு, பறந்துகொண்டிருக்கும்போதே இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சுபத்ரா அந்த விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பறக்கச் செய்துள்ளது.ஐஎன்எஸ் சுபத்ரா கார்வார் கடற்படை தளத்தில் இருந்துள்ளது.அங்கிருந்து 145கிமீ தொலைவில் உள்ள ஒரு தரைத் தளத்தில் இருந்து விமானம் பறந்துள்ளது.வானிலேயே இந்த விமானத்தை தனது கட்டுப்பாட்டில் சுபத்ரா கப்பல் எடுத்துள்ளது.

மொத்தமாக 3.30 மணி நேரம் இந்த பறத்தல் நிகழ்வு நடைபெற்றது.இதில் போர்க்கப்பலின் கட்டுப்பாட்டில் 40நி பறந்துள்ளது.இந்த சாதனை ஆளில்லா விமான மேம்பாட்டில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தரையில் தொலைவில் இருந்து பறக்கும் ஒரு ஆளில்லா விமானத்தை ஒரு போர்க்கப்பல் தனது கட்டுப்பாட்டில் எடுக்க முடியும்.இது நமது படைகளுக்கு வலுசேர்க்கும் ஒரு திறன் என்பது மாற்றுக்கருத்தில்லை.

தபாஸ் ஆளில்லா விமானத்தால் நீண்ட நேரம் பறக்க முடியும் என்பதால் கடற்சார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு இந்த விமானத்தை கடற்படையால் பயன்படுத்த இயலும்.