விமானப்படை , கடற்படைகளை தொடர்ந்து தனி செயற்கைகோளை பெறும் இந்திய தரைப்படை !!

விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றை தொடர்ந்து இந்திய தரைப்படைக்கென ஒரு பிரத்யேக தனி செயற்கைகோளை வழங்கும் விதமாக கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சகம் ISRO இஸ்ரோவின் துணை நிறுவனமான NSIL நிறுவனத்துடன் சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்துள்ளது.

இந்த செய்றகைகோள் GSAT – 7B என அழைக்கப்படுகிறது இதன் எடை 5000 கிலோ ஆகும், இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது இதனை பயன்படுத்தி இந்திய சீன எல்லையோரம் உள்ள இந்திய படைகளின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இந்திய தரைப்படை RISAT,2BR1 மற்றும் இந்திய விமானப்படையின் GSAT – 7A ஆகிய செயற்கைகோள்களை இத்தகைய தொழில்நுட்ப வசதிக்கு சார்ந்து இருக்க வேண்டிய சூழல் நிலவியது அதாவது இந்திய தரைப்படையின் 30 சதவிகித தகவல்கள் இந்திய விமானப்படையின் GSAT – 7A செயற்கை கோள் மூலம் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோள் ஒரு அடுத்த தலைமுறை அதிநவீன செய்றகைகோள் ஆகும், இது இந்திய தரைப்படையின் கண்ணாக விண்வெளியில் செயல்பட்டு பல ஆயிரம் கிலோமீட்டர்களை கண்காணிக்கும் என கூறப்படுகிறது, இந்த கடற்படையின் செயற்கைகோளானது சுமார் 2000 கடல் மைல்கள் தொலைவிற்கு கண்காணிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

இந்திய கடற்படையின் செயற்கைகோள் GSAT – 7 Rukmini ருக்மினி என அழைக்கப்படுகிறது இந்திய விமானப்படையின் செயற்கைகோள் GSAT 7A என அழைக்கப்படுகிறது இரண்டும் முறையே 30 ஆகஸ்ட் 2013 மற்றும் 19 டிசம்பர் 2018 ஆகிய நாட்களில் ஏவப்பட்டன, GSAT 7B விரைவில் ஏவப்படும் எனவும் அதன்பிறகு இந்திய தரைப்படையின் ஒட்டுமொத்த தகவல் தொடர்பு கட்டமைப்பும் ஒரே குடையின் கீழ் வரும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.