அசாம்: நாரங்கி தரைப்படை தளத்தை பசுமை தளமாக மாற்றும் இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை அசாம் மாநிலம் நாரங்கி பகுதியில் உள்ள தனது தளத்தை முழுவதும் பசுமை திறன் கொண்ட தளமாக மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது, இது உலக வெப்பமயமாதல் தடுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய தரைப்படை செயல்படுத்துகிறது.

அந்த வகையில் நாரங்கி தரைப்படை தளத்தில் முதல்கட்டமாக 1 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது இதனை 3 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தரைப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சூரிய மின்சக்தி அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் அனைத்துமே இந்திய சுதேசி தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பாகும், இந்த அமைப்பை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.