இந்தியா அமெரிக்கா இடையே போர் கப்பல் மற்றும் போர் விமான என்ஜின் தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து !!

  • Tamil Defense
  • June 3, 2023
  • Comments Off on இந்தியா அமெரிக்கா இடையே போர் கப்பல் மற்றும் போர் விமான என்ஜின் தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து !!

பத்து ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல் என்ஜின்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது முதல்கட்டமாக போர் விமான என்ஜின் தயாரிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும் எனவும் பின்னர் இது போர் கப்பல்களுக்கான என்ஜின்களின் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

கடந்த ஃபெப்ரவரி மாதம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்த போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசினார் அப்போது மேற்குறிப்பிட்ட விஷயத்தை அஜித் தோவல் வலியுறுத்தி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அங்கு இந்த ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் விரைவில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் இந்தியா வரவுள்ளார் அப்போது இது சார்ந்த முக்கிய விஷயங்கள் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சார்பில் HAL Hindustan Aeronautics Limited மற்றும் அமெரிக்கா சார்பில் GE General Electrics ஆகிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற உள்ளன, இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய அமெரிக்க உறவுகள் புதிய உச்சத்தை தொடும் எனவும் ஐரோப்பிய போட்டியை அமெரிக்கா வீழ்த்த முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.