
இந்தியா அமெரிக்காவிடம் இருந்து மூன்று பில்லியன் டாலர்கள் செலவில் 31 ட்ரோன்களை பெற உள்ளது.இதில் இந்திய கடற்படை 15 சீகார்டியன் ட்ரோன்களை பெறும்.மேலும் விமானப்படை மற்றும் இராணுவம் தலா 8 ஸ்கைகார்டியன் ட்ரோன்களை பெற உள்ளது.
இது தவிர இந்தியாவின் ஹால் மற்றும் அமெரிக்காவின் General Electric நிறுவனம் இணைந்து இந்திய விமான படைக்காக விமான என்ஜின் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.இது இந்தியா அமெரிக்கா இடையிலான புதிக சகாப்தமாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியா பெற உள்ள ட்ரோன்கள் அதிஉயரத்தில் நீண்ட நேரம் பறக்க வல்லது.பாதுகாப்பான தொலைத் தொடர்பு வசதி கொண்டுள்ளது.கண்காணிப்பு, உளவு பணிகளுக்கு ஏற்றவை ஆகும்.
இந்திய கடற்படை ஏற்கனவே இரு ரீப்பர் ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.சீன கடற்படைக்கு எதிரான இந்திய கடற்படையின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த ட்ரோன்கள் பக்கபலமாக உள்ளன.
இந்த ட்ரோன்கள் பறப்பதற்கு மணிக்கு 1000ரூபாய்கள் தான் செலவாகிறது.அதே நேரத்தில் கண்காணிப்பு பணிகளுக்காக பறக்கும் பி-8ஐ விமானங்களை இயக்க மணிக்கு சில லட்சங்கள் செலவாகும்.கண்காணிப்பு மட்டுமல்லாமல் நடவடிக்கைகளை பொறுத்து இவை ஆயுதங்களும் தாங்கிச் செல்லும்.
36மணி நேரம் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் கொண்டவை இந்த ட்ரோன்கள்.