AMCA விமானத்திற்காக புதிய என்ஜினை தேடும் இந்தியா

  • Tamil Defense
  • June 22, 2023
  • Comments Off on AMCA விமானத்திற்காக புதிய என்ஜினை தேடும் இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து அனுமதி பெற்று F-414 engine என்ஜின்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA விமானத்திற்காக புதிய என்ஜினை தேடும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.

இதற்காக சர்வதேச நிறுவனங்களான British Rolls royce, French Safran , American GE ஆகிய நிறுவனங்களிடம் பேசி வருகிறது.இந்த நிறுவனத்துடன் இணைந்து 110-120kN thrust திறன் கொண்ட என்ஜினை மேம்படுத்தி அதை இந்தியாவிலேயே தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இதற்கான அதிகபட்ட நிதியை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை முடிவு பெற்ற நிலையில் தற்போது இந்தியா டென்டர் அறிவிக்க உள்ளது.இதில் வெற்றிபெறும் நிறுவனத்துடன் இந்தியா இணைந்து புதிய என்ஜினை தயாரிக்கும்.சுமார் 15000 கோடிகள் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.