அமெரிக்காவிடம் இருந்து ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை பெற இந்திய இராணுவம் விருப்பம்

அமெரிக்காவிடம் இருந்து Stryker Armoured vehicles தயாரிக்க அனுமதி பெற்று அவற்றை இந்தியாவில் தயாரித்து படைகளில் இணைக்க இந்திய இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது.வீரர்கள் இடமாற்றம், தாக்குதலுக்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கவச வாகனங்களை பெற இராணுவம் தற்போது முயற்சித்து வருகிறது.

எல்லையில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிவதற்கு ஏற்ற வாகனங்கள் பெற இராணுவம் முயற்சி செய்த போது அமெரிக்கா தனது ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்களை அளிக்க முன்வந்தது.தற்போது இந்திய இராணுவமும் இந்த வாகனங்களை அனுமதி பெற்று இந்தியாவில் தயாரித்து படையில் இணைக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

இந்த திட்டத்தை தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.திட்டத்தின் முடிவு குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு எடுக்கும்.