ஆறு நாடுகளுக்கு குறிவைக்கும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம்- ஏற்றுமதி செய்ய திட்டம்

பிரம்மோஸ் நிறுவனம் ஆறு நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.பிலிப்பைன்ஸ் உடனான வெற்றிகரமான ஏற்றுமதிக்கு பிறகு தற்போது ஆறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்பாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு 375 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் மூலமாக கடலோர பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை ஏற்றுமதி செய்ய உள்ளது இந்தியா.இந்தோனேசியா பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் ,625 மில்லியன் டாலர்கள் செலவில் வியட்நாமும் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“Act East ” நோக்கம் மூலமாக சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது.