நீர்மூழ்கி ஒப்பந்தத்தில் கூட்டாக இறங்கும் இந்திய-ஜெர்மன் நிறுவனங்கள்; இந்திய ஆயுதங்களை பொருத்த சம்மதம் !!

  • Tamil Defense
  • June 7, 2023
  • Comments Off on நீர்மூழ்கி ஒப்பந்தத்தில் கூட்டாக இறங்கும் இந்திய-ஜெர்மன் நிறுவனங்கள்; இந்திய ஆயுதங்களை பொருத்த சம்மதம் !!

சுமார் 45,000 கோடி ரூபாய் மதிப்புமிக்க ஆறு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கான போட்டி சூடுபிடித்துள்ளது, ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்தியா வந்துள்ள நிலையில் இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜெர்மானிய நிறுவனமான TKMS ThyssenKrupp Marine Systems மற்றும் இந்திய நிறுவனமான MDL – Mazagon Docks Limited ஆகியவை இணைந்து இந்த ஒப்பந்தத்தில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளன, மேலும் ஜெர்மனி இந்திய ஆயுதங்களை நீர்மூழ்கி கப்பல்களில் இணைத்து பயன்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

ஜெர்மனி பொருளாதார மந்தநிலையை சந்தித்துள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் ஜெர்மனிக்கு மிக முக்கியமானதாகும் மேலும் இது இந்திய ஜெர்மானிய உறவுகளில் புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கும் , இதை வலியுறுத்தும் விதமாக இது Flagship ஒப்பந்தமாக இருக்கும் என போரிஸ் பிஸ்டோரியல் கூறியுள்ளார்.

இந்திய கடற்படைக்கு 24 அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் தேவை ஆனால் தற்போது 16 நீர்மூழ்கிகள் உள்ளன அவற்றில் 6 மட்டுமே புதியவை ஆகும் மற்றவை எல்லாம் 30 ஆண்டுகளுக்கு மேல் பழையனவாகும் ஆகவே இந்த ஒப்பந்தம் இந்திய கடற்படைக்கு மிக மிக முக்கியமானதாகும்.