கனடாவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடுகளில் இந்தியாவும் அடக்கம் !!

  • Tamil Defense
  • June 9, 2023
  • Comments Off on கனடாவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடுகளில் இந்தியாவும் அடக்கம் !!

சமீபத்தில் கனேடிய உலகளாவிய விவகாரங்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனேடிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோடி தாமஸ் கலந்து கொண்டு பேசினார் அப்போது சில அதிர்ச்சி அளிக்கும் பரப்பரப்பை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டார்.

அதாவது கனடாவின் உள் விவகாரங்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் பல்வேறு நாடுகள் மற்றும் நாடற்ற அமைப்புகளின் தலையிடு அதிகளவில் இருப்பதாகவும் எல்லாருக்கும் அறிமுகமான சீனா பின்னர் ரஷ்யா ஈரான் இந்தியா ஆகியவை அடக்கம் என கூறினார்.

ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் வினா நட்ஜிபூல்லா டோராண்டோ ஸ்டார் இதழுக்கு பேட்டி அளிக்கையில் கூறியுள்ளார் மேலும் அந்த இதழ் இந்தியா கனடாவின் உள்விவகாரங்களில் தலையீடுவது பற்றி கனடிய பாதுகாப்பு அமைப்புகள் பலமுறை மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா உடனான இருதரப்பு பொருளாதார மற்றும் அறிவியல் துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கனடாவின் இந்தோ-பசிஃபிக் திட்டங்களில் இந்தியா தவிர்க்க முடியாத கூட்டாளி என கூறி வந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது இது இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என தற்போது கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு காரணம் கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் கனடா ஆளும் கூட்டணியில் 24 இடங்களுடன் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் மிக முக்கியமான காலிஸ்தான் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இந்திய அரசு பல முறை கண்டனம் தெரிவித்தும் ராஜாங்க ரீதியாக நடவடிக்கை எடுத்தும் கனடா அரசாங்கம் காலிஸ்தான் அமைப்புகளை கட்டுபடுத்த தவறிவிட்டது குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கருதப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.