
தேவை ஏற்படின் எல்லைத் தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்.முன்பு புல்வாமா தாக்குதல் நடத்திய போது இந்தியா சற்றும் யோசிக்காமல் பதிலடி தந்ததை நினைவு கூர்ந்த அவர் இந்தியா நாளுக்கு நாள் பலமானவதாக கூறியுள்ளார்.
ஜம்முவில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர் உரி மற்றும் புல்வாமா தாக்குதலின் போது இந்திய பிரதமர் மோடி அவர்கள் 10 நிமிடங்கள் கூட யோசிக்காமல் பதிலடிக்கு உத்தரவு வழங்கினார் என பேசியுள்ளார்.இதன் மூலம் உலகிற்கு இந்தியா முன்பை போல இல்லை தேவை ஏற்படின் எல்லைத் தாண்டி பதிலடி தாக்குதல் நடத்துவோம் என பேசியுள்ளார்.
வடகிழக்கு பகுதியிலும், நக்சல் பாதித்த பகுதியிலும் பயங்கரவாத செயல்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.
மேலும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசிய அவர் அது எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் என உறுதிபடக் கூறியுள்ளார்.