சமீபத்தில் ஈரானிய உளவுத்துறை அமைச்சரின் ஆலோகர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள காஸ்வின் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ஈரானிடம் இருந்து சீனா சுமார் 15 ஆயிரம் Shahed-136 ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசும்போது சீனா தவிர மேலும் 90 நாடுகள் இந்த ட்ரோன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார், பாதுகாப்பு நிபுணர்கள் உக்ரைன் போரில் இந்த ட்ரோன்களின் பயன்பாடு காரணமாக தான் இப்படியான வரவேற்பு சந்தையில் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஈரான் சீனா மற்றும் ரஷ்யா உடனான நெருக்கத்தை அதிகரித்து வரும் நிலையில் அந்த ஆலோசகர் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மேற்குலக நாடுகளால் நாங்கள் ரஷ்யாவுடன் நெருங்குவதை பொறுத்து கொள்ள முடியவில்லை அதற்கு உக்ரைன் போர் எடுத்து காட்டாகும் என கூறியுள்ளார்.
இந்த ட்ரோன்களை ரஷ்யாவுக்கு ஈரான் ஏற்றுமதி செய்துள்ளதாக உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி அதை ஈரான் மறுத்து வந்த நிலையில் தற்போது வெளியான இந்த தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.