சீன போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஜெர்மன் போர் விமானிகள் !!

  • Tamil Defense
  • June 6, 2023
  • Comments Off on சீன போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஜெர்மன் போர் விமானிகள் !!

பல முன்னாள் ஜெர்மன் விமானப்படை போர் விமானிகள் தற்போது சீனாவில் தங்கி இருந்து சீன விமானப்படையின் போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ஏறத்தாழ 200 முன்னாள் ஜெர்மன் விமானப்படை போர் விமானிகள் சீனாவில் போர் விமானி பயிற்றுநர்கள் ஆகவும் ஒப்பந்ததாரர்கள் ஆகவும் பணியாற்றி வருவதாகவும் இவர்களுக்கு செஷல்ஸ் நாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாக பணம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜெர்மானிய அரசு சீன அரசை தொடர்பு கொண்டு முன்னாள் ஜெர்மன் போர் விமானிகளை பயிற்றுநர்கள் ஆக பணி அமர்த்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் ஜெர்மன் தவிர வேறு பல ஐரோப்பிய நாடுகளின் முன்னாள் போர் விமானிகள் சீன போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது, 2021ஆம் ஆண்டு சீன கடற்படை போர் விமானிகளுக்கு ஃபிரெஞ்சு இங்கிலாந்து கடற்படை போர் விமானிகள் பயிற்சி அளித்து வருவது வெளியானது குறிப்பிடத்தக்கது.