மும்பை தாக்குதலுக்கு காரணமானவனை பயங்கரவாதியாக அறிவிக்க முயன்ற இந்தியா ; தடுத்த சீனா- ஐநாவின் மற்றொரு தோல்வி
1 min read

மும்பை தாக்குதலுக்கு காரணமானவனை பயங்கரவாதியாக அறிவிக்க முயன்ற இந்தியா ; தடுத்த சீனா- ஐநாவின் மற்றொரு தோல்வி

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்ப் பயங்கரவாதியான சஜ்ஜித் மிர் என்பவனை ஐநாவில் பயங்கரவாதியாக அறிக்க இந்தியாவும் அமெரிக்காவும் கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தடுத்துள்ளது.இவன் மும்பை தாக்குதலுக்கு காரணமானவன் ஆகும்.அமைதியை நிலைநாட்டுவதற்கு தடையாக இருக்கும் காரணத்தால் இது ஐநாவின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.

மும்பை தாக்குதல் காரணமாக இவனை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது மேலும் அமெரிக்கா இவன் தலைக்கு 5 மில்லியன் டாலர்கள் விலை வைத்துள்ளது.இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவனை முடக்க கொண்டவரப்பட்ட தீர்மானத்திற்கு தான் சீனா தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பாக்கை அடிப்படையாக கொண்டு இயங்கும் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தின் ஒரு மூத்த பயங்கரவாதியாக இவன் உள்ளான்.மேலும் 2008 மும்பை தாக்குதலுக்கு காரணமானவனும் இவன் ஆவான்.பாக்கின் உற்ற நண்பனாக இருக்கும் சீனா இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐநாவில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அமெரிக்க உளவுத்துறையான FBI அமைப்பும் இவனை முக்கிய பயங்கரவாதியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.