போதைக்கு அடிமையான வீரர்கள் 30% ஒய்வூதியம் பெற முடியும் ராணுவ நீதிமன்றம் !!

சமீபத்தில் ஒய்வு பெற்ற ராணுவ வீரர் பல்ஜீத் சிங் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்து இருந்தார் இவர் 1998ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி படையில் இணைந்து 2015ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 28ஆம் தேதி ஒய்வு பெற்றார், பின்னர் ராணுவ தளங்களை பாதுகாக்கும் DSC படையில் ஏப்ரல் 23 2016 அன்று இணைந்தார்.

அப்போது மது போதைக்கு அடிமையானவர் எனவும் 40% பாதிப்பு உள்ளதும் மருத்துவ சோதனையில் தெரிய வந்ததையடுத்து ஜனவரி 31, 2020 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டார் மேலும் இந்த 40% பாதிப்பு ராணுவ பணி நிமித்தமாக ஏற்பட்ட பாதிப்பில்லை என்பதால் அவருக்கு Disability Pension எனும் பாதிப்பு சார்ந்த ஒய்வூதியம் மறுக்கப்பட்டது.

தொடர்ந்து பல்ஜீத் சிங் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அதில் பயங்கரவாத எதிர்ப்பு, அதிக உயர பகுதிகளில் பணி, தனிமையான சூழல்களில் பணி போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு மது போதைக்கு அடிமையானதாகவும் ஆகவே Invalid Pension வழங்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிமன்ற அமர்வு அவருக்கு 30% ஒய்வூதியம் வழங்கவும், மருத்துவ அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர்களின் பணிக்காலத்தை Invalid pension வழங்க கணக்கில் எடுத்து கொள்ள கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது.