செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை தயாரித்தவருக்கு புதிய பொறுப்பு !! யார் அவர் ?

இந்திய பாதுகாப்பு துறையில் மிக முக்கியமான நியமனம் ஒன்று செய்யப்பட்டுள்ளது அதாவது நமது DRDO – Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏவுகணைகள் பிரிவின் தலைவராக திரு. உம்மலலேனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நமது செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணையின் தயாரிப்பில் மிக முக்கியமான பங்கு வகித்தவர் ஆவார் இவர் இந்தியாவின் ஏவுகணை தயாரிப்பில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணைகள் உருவாக்கம் மற்றும் தயாரிப்பில் இவருக்குள்ள அறிவாற்றல் இந்திய பாதுகாப்பு துறைக்கு இன்றியமையாதது ஆகும், தன்னிறைவு அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இவர் எடுப்பார் என கூறப்படுகிறது.