இந்திய அமெரிக்க ஜெட் என்ஜின் ஒப்பந்தம் நிறைவேறினால் 600 இந்திய நிறுவனங்கள் பயன்பெறும் !!

  • Tamil Defense
  • June 7, 2023
  • Comments Off on இந்திய அமெரிக்க ஜெட் என்ஜின் ஒப்பந்தம் நிறைவேறினால் 600 இந்திய நிறுவனங்கள் பயன்பெறும் !!

சமீபத்தில் அமெரிக்க அரசு இந்தியாவுக்கு ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தை தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் அளிக்க ஒப்புதல் வழங்கியது இதையடுத்து அமெரிக்காவின் GE General Electrics மற்றும் இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடி வருகிற 21 – 24 வரையிலான நாட்களில் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து சில அதிமுக்கிய மெகா பாதுகாப்பு துறைசார் ஒப்பந்தங்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டிலும் இதே போன்ற முயற்சி நடைபெற்றது ஆனால் அப்போது அமெரிக்கா அடிமட்ட தொழில்நுட்பங்களை மட்டுமே தர முன்வந்தது ஆகவே அது ஒப்பந்தமாக நிறைவேறாமல் போனது ஆனால் தற்போது அமெரிக்கா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் ஒப்பந்தம் ஆக உள்ளது.

இந்தியாவிலேயே இந்த கூட்டு தயாரிப்பு நடைபெறும் எனவும் அதற்கான இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும் அனேகமாக ஒடிசா மாநிலம் கோராபுட்டில் உள்ள HAL என்ஜின் தயாரிப்பு மையம் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது இதன்மூலம் 500 – 600 இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.