Breaking News

ஒவ்வொரு மாதமும் 10ஆயிரம் ட்ரோன்களை ரஷ்ய தாக்குதலில் இழக்கும் உக்ரைன் இங்கிலாந்து அறிக்கை !!

  • Tamil Defense
  • May 25, 2023
  • Comments Off on ஒவ்வொரு மாதமும் 10ஆயிரம் ட்ரோன்களை ரஷ்ய தாக்குதலில் இழக்கும் உக்ரைன் இங்கிலாந்து அறிக்கை !!

இங்கிலாந்தின் Royal United Services Institute எனப்படும் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சிந்தனை மையம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் ரஷ்ய உக்ரைன் போர் பற்றிய மிக முக்கியமான தகவல் ஒன்று இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ரஷ்யாவின் மின்னனு போர்முறை அமைப்புகளால் ஒவ்வொரு மாதமும் உக்ரைன் சுமார் 10 ஆயிரம் ஆளில்லா வானூர்திகளை அதாவது ட்ரோன்களை இழந்து வருவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 300 ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா வீழ்த்தி வருவதாகவும் இதற்கு ரஷ்யாவின் ராணுவ ஆபரேஷன் திட்டமிடல்களில் மின்னனு போர்முறை EW – Electronic Warfare மிக முக்கியமான இடம்பெற்றுள்ளது தான் என அந்த அறிக்கை கூறுகிறது.

ரஷ்ய படைகள் 750 மைல் நீளமுள்ள போர்க்கள முன்னனியில் இருந்து 4 மைல் பின்னாடி ஒவ்வொரு 6 மைலுக்கும் ஒரு மிகப்பெரிய முக்கியமான மின்னனு போர்முறை அமைப்பு நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இவை ட்ரோன்களை முடக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தி வரப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ரஷ்ய உக்ரைன் போர் உலகின் முதல் ட்ரோன் Vs ட்ரோன் போராக கருதப்படுகிறது, மேலும் அதிகளவில் மின்னனு போர்முறை பயன்படுத்தி வரப்படுவதாகவும் உக்ரைன் எந்த வகை ட்ரோன்களை இழந்துள்ளது போன்ற தகவல்கள் இல்லை ஆனால் இந்த தகவல் உக்ரைன் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டதாக அந்த அறிக்கை கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.