ஏற்கனவே 5 வீரர்களை கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் மீண்டும் 2 வீரர்கள் வீரமரணம் !!

  • Tamil Defense
  • May 5, 2023
  • Comments Off on ஏற்கனவே 5 வீரர்களை கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் மீண்டும் 2 வீரர்கள் வீரமரணம் !!

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்ய சென்ற ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், இதற்கு PAFF எனும் அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து ராணுவம் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை துவங்கியது , மிகப்பெரிய அளவிலான பகுதியை சுற்றி வளைத்து ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அந்த சம்பவத்திற்கு பயங்கரவாதிகள் ரஜோரி செக்டாரில் கண்டி காட்டுபகுதியில் ஒரு குகையில் பதுங்கி இருந்த போது சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி ஒன்றை பயங்கரவாதிகள் வெடிக்க செய்த போது இரண்டு ராணுவத்தினர் படுகாயம் அடைந்து வீரமரணம் அடைந்தனர், மேலும் ஒரு அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் தரப்பிலும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன, இதையடுத்து காயமடைந்தோர் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மேலும் அதிகளவில் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.