DRDO விஞ்ஞானி இச்சை வலை எதிர்ப்பு கற்ற பிறகும் பாக் உளவுத்துறையிடம் வீழ்ந்த கதை !!
சமீபத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO – Defence Research & Development Organisation நிறுவனத்தின் மூத்த விஞ்ஞசானியான ப்ரதீப் குருல்கர் பாகிஸ்தானுக்கு தகவல் பரிமாறியதால் கைது செய்யப்பட்டான.
இவன் புனே நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வளாகத்தில் நடத்தப்பட்ட Anti Honey Trap Class அதாவது இச்சை காரணமாக வீழாமல் இருக்க நடத்தப்பட்ட வகுப்பில் கலந்து கொண்ட பிறகும் பாகிஸ்தான் உளவுத்துறையின் வலையில் சிக்கியுள்ளான்.
நாட்டு பற்று மிக்க பெண்ணாக சமுக வலைதளத்தில் குருல்கருக்கு அறிமுகம் ஆன ஒரு பெண் நிர்வாண படங்களை அனுப்பி அவரை சிக்க வைத்து அதை வைத்து மிரட்டி பல்வேறு முக்கியமான ரகசிய தகவல்களை வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வலைதளத்தில் குருல்கர் பற்றி விரிவாக இருந்த தகவல்களை கொண்டு அவரை குறிவைத்து பாகிஸ்தான் உளவுத்துறை வலை விரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது, மேலும் தற்போது குருல்கரின் செல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பரிசோதித்து ஆதாரம் திரட்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.