புதிய போர் கப்பல்களில் ரேடார் இணைக்கும் பணிகளை துவங்கிய ஸ்பெயின் நிறுவனம் !!
இந்திய கடற்படைக்கான P-17 ALPHA திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் புத்தம் புதிய நீலகிரி ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர் கப்பல்களில் LANZA 3D முப்பரிமாண ரேடார்களை இணைக்கும் பணிகளை ஸ்பெயின் நிறுவனம் துவங்கி உள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனமான INDRA Sitemas S.A இந்திய கடற்படைக்கான 23 ரேடார்களில் முதலாவது ரேடாரை முதலாவது நீலகிரி ரக கப்பலில் இணைக்க உள்ளது.
இந்த LANZA 3D முப்பரிமாண ரேடாரனது இந்திய போர் கப்பல்களின் திறனை பன்மடங்கு அதிகரிக்கும் மேலும் அதிக ஈரப்பதம், வெப்பம் போன்ற காலநிலைகள் மற்றும் மின்னனு தாக்குதல் நடத்தப்பட்டாலும் சிறப்பாக இயங்கும் திறன் கொண்டதாகும்.
இந்த LANZA 3D ரேடார் கப்பலின் இரண்டாவது ரேடார் ஆகும் இது போர் விமானங்கள், இதர வானூர்திகள், பலிஸ்டிக் ஏவுகணைகளை சுமார் 460 கிலோமீட்டர் தொலைதூரத்திற்கு கண்காணித்து கண்டறியும் ஆற்றல் கொண்டதாகும்.
அதே நேரத்தில் கப்பலின் முதன்மை ரேடாராக கொல்கத்தா, விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்கள் போன்று வழக்கமான இஸ்ரேலிய MF STAR பல திறன் ரேடார் இருக்கும் இது 300 – 450 கிலோமீட்டர் தொலைவு வரை கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.