மணிப்பூர் காவல்துறையின் பயிற்சி கல்லூரி, IRB முகாம் மற்றும் இரண்டு காவல் நிலையங்களில் இருந்து சுமார் 1000 துப்பாக்கிகள் மற்றும் 10000 தோட்டாக்கள் வன்முறை கும்பல்களால் திருடப்பட்டுள்ளன.
குகி மற்றும் மேய்டெய் ஆகிய இரு இன குழுக்களும் இந்த ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர், இது தவிர இந்தியாவில் பயன்பாட்டிலேயே இல்லாத ஆயுதங்கள் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தி வரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் அரசுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள CRPF இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங் இதுவரை 456 துப்பாக்கிகள் மற்றும் 6670 தோட்டாக்களை மீட்டுள்ளதாகவும் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.