முன்னாள் உக்ரைனிய பாராளுமன்ற உறுப்பினரான இல்யா கிவா , உக்ரைன் கூட்டு படைகள் தலைமை தளபதியான ஜெனரல் வலேரி சலூஸ்னியின் இருப்பிடத்தை உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ரஷ்யாவுக்கு போட்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த தகவல் காரணமாக தான் ரஷ்யா வலேரி சலூஸ்னியின் இருப்பிடத்தின் துல்லியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இல்யா கிவா தனது டெலிகிராம் சமுக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார்.
அதாவது அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி தனது பதவிக்கு ஜெனரல் வலேரி சலூஸ்னியால் ஆட்சி கவிழ்ப்பு முறைய் ஊடாக ஆபத்து ஏற்படலாம் என கருதியதால் ரஷ்யாவுக்கு தகவல் கசியவிட்டு இதனை செய்ததாக விளக்கம் அளிக்கிறார்.
தற்போது வலேரி சலூஸ்னி உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது முக்கியமில்லை ஆனால் எப்படியோ தற்போது அவரை எங்கும் காணமுடியவில்லை ஆகவே அதிபர் செலன்ஸ்கிக்கு இனி அரசியல் பிரச்சினைகள் இல்லை என கூறுகிறார்.
மேலும் உக்ரைனிய உள்துறை அமைச்சகத்தின் காலம் சென்ற அமைச்சர் டெனிஸ் மோனாஸ்டிர்ஸ்கி, இணை அமைச்சர் யெவ்ஹென் யெனின் மற்றும் உள்துறை செயலர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர்கள் இறந்ததனர்.
இந்த நிகழ்வும் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும், அதிபர் செலன்ஸ்கி ஒரு பயங்கரவாதி எனவும் அவரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பிரதான ஆயுதம் கொலை புரிவது தான் எனவும் இல்யா கிவா காட்டமாக விமர்சனம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.