
ரஷ்ய நகரமான ரோஸ்டோவ் ஆன் டான் பகுதியில் பணியாற்றி வந்த ரஷ்ய பாதுகாப்பு துறை பொறியாளர் ஒருவர் உக்ரைனுக்கு தகவல் பரிமாறிய காரணத்தால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ரஷ்ய வெளிநாட்டு உளவுத்துறையான FSB மேற்குறிப்பிட்ட பொறியாளரை கையும் களவுமாக கைது செய்துள்ளது, இவர் உக்ரைனுக்கு கடந்த ஃபெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை பல்வேறு முக்கிய தகவல்களை பரிமாறியதாக குற்றம்சாட்டி உள்ளது.
அதாவது வான் பாதுகாப்பு அமைப்புகள், ரோஸ்டோவ் டான் நகரில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள ரஷ்ய வீரர்கள், முக்கிய பாதுகாப்பு துறை அமைப்புகள் பற்றிய தகவல்களை சமுக வலைதளம் வாயிலாக பரிமாறி உள்ளார், அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் பெயரை ரஷ்ய அதிகாரிகள் வெளியிடவில்லை.
தற்போது அந்த நபர் மீது ரஷ்ய உளவுத்துறையான FSB யின் விசாரணை அதிகாரிகள் தேசத்துரோக வழக்கை தொடுக்க உள்ளனர், குற்றம் நிருபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.