
புது டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி அவர்கள் சௌரிய சக்ரா விருதை ரைபிள்மேன் அவுரங்கசேப் அவர்களுக்கு ( வீரமரணத்திற்கு பிறகு ) வழங்கினார்.
இந்த விருதை அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையின் 44வது பட்டாலியன் படையில் பணியாற்றிக் கொண்டிருந்த ரைபிள்மேன் அவுரங்கசேப் அவர்கள் கடந்த வருடம் 2018ல் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஈத் பெருநாளை கொண்டாட வீடு சென்ற போது பயங்கரவாதிகள் கடத்தி பின் அவரை தாக்கி கொன்றனர்.தோட்டாக்கள் துளைக்கப்பட்ட அவரது உடல் புல்வாமாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதியான சமீர் டைகரை கொன்ற மேஜர் ரோகித் சுக்லா அவர்களது குழுவில் இருந்தவர் தான் ரைபிள்மேன் அவுரங்கசேப் ஆவார்.
அவர் உயிரிழந்த பிறகு அவரது இரு சகோதரர்களும் தற்போது இராணுவத்தில் பணிபுரிகின்றனர்.