உக்ரைனுக்கு கிட்டத்தட்ட தனது அனைத்து மிக்-29 போர் விமானங்களையும் வழங்கிய போலந்து !!
போலந்து அதிபர் ஆண்டரேஜ் டூடா போலந்து விமானப்படையில் இருந்த மிக் -29 MiG -29 விமானங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.
போலந்து விமானப்படையில் 100 போர் விமானங்கள் உள்ளன அதில் 30 விமானங்கள் MiG – 29 ரகத்தை சேர்ந்தவை ஆகும், அவற்றில் 28 விமானங்களை உக்ரைனுக்கு கொடுத்துள்ளது ஆக தற்போது போலந்து தன்னிடம் இருந்த 28% விமானங்களை இழந்துள்ளது.
ஆனால் இது ஒரு புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது காரணம் பழைய விமானங்களை கொடுப்பதன் மூலமாக நேட்டோ உதவியுடன் புதிய அதிநவீன போர் விமானங்களை பெற முடியும்
இதே போன்ற திட்டத்தை ஸ்லோவாக்கியா செயல்படுத்தி உள்ளது அந்த வகையில் உக்ரைனுக்கு 13 MiG-29 போர் விமானங்களை போலந்தை தொடர்ந்து வழங்க ஸ்லோவாக்கியா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு F-35 ஐந்தாம் தலைமுறை விமானம் நான்கு MiG – 29 விமானங்கள் செய்யும் தரை தாக்குதல் பணியை ஒற்றையாக மேற்கொள்ளும், மேலும் அதே போல் நான்கு MiG – 29 விமானங்களும் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்கும் பணிக்கு சென்றால் அவை அழிக்கப்படும் ஆனால் F-35 தாக்குதல் நடத்திவிட்டு திரும்ப வரும் என்பது குறிப்பிடத்தக்கது.