விடுதலை வேண்டும்- கதறும் பாகிஸ்தானியர்கள்

  • Tamil Defense
  • May 11, 2023
  • Comments Off on விடுதலை வேண்டும்- கதறும் பாகிஸ்தானியர்கள்

பாக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு நாடு முழுவதும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவ தலைமையகம், ஐஎஸ்ஐ தலைமையகம், இராணுவ கண்டோன்மென்டுகள் என அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல்கள் நடத்தியதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் முக்கிய புள்ளிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 150 விமானங்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.இந்நிலையில் பாக் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என பாகிஸ்தானியர்கள் லண்டனில் உள்ள பாக் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கானொளி தற்போது வெளியாகியுள்ளது.