ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நடைபெற உள்ள G20 சுற்றுலா செயலாக்க மாநாட்டில் மும்பை தாக்குதல் போன்ற கொடுர தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI பயங்கரவாத அமைப்புகளை ஏவி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை அதிகபடுத்தி உள்ளனர், மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பயண திட்டத்தில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டம் பற்றி சமீபத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத உதவியாளர் ஒருவனை விசாரிக்கும் போது தெரிய வந்ததாக கூறப்படுகிறது மேலும் காஷ்மீர் காவல்துறை பொது மக்கள் நலன் கருதி எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.