ஹங்கேரிய எரிவாயு நிலையத்தை தாக்கிய பாகிஸ்தான் தாலிபான்கள் !!
ஹங்கேரி நாட்டை சேர்ந்த பன்னாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான MOL பாகிஸ்தானில் MOL Pakistan என்ற பெயரில் துணை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு பாகிஸ்தானுடைய வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்தூன்வா மாகாணத்தில் ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு இயற்கை எரிவாயு நிலையத்தை மே22 அன்று 50 பாகிஸ்தான் தாலிபான் TTP – Tehrik e Taliban Pakistan பயங்கரவாதிகள் தாக்கினர்.
M-8 மற்றும் M-10 ஆகிய இரண்டு கிணறுகள் மீதும் RPG உள்ளிட்ட கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர், இரண்டு கிணறுகள் மீது நடத்தப்பட்ட முறியடிக்கப்டட நிலையில் M-10 கிணற்றை பாதுகாத்து வந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நான்கு பாகிஸ்தான் துணை ராணுவ படையினர் மற்றும் இரண்டு தனியார் காவலர்கள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது இரண்டு கிணறுகளிலும் உற்பத்தி பணிகள் விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் தாக்குதல் நடத்திவிட்டு TTP பயங்கரவாதிகள் அருகிலுள்ள மாகாணமான வடக்கு வசீரிஸ்தானுக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் ஒரு சூரிய சக்திமின் உற்பத்தி நிலையம் சேதம் அடைந்துள்ளதும் கூடுதல் தகவல்கள் ஆகும்.