ஆபரேஷன் த்ரிநேத்ரா ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • May 6, 2023
  • Comments Off on ஆபரேஷன் த்ரிநேத்ரா ஒரு பார்வை !!

25 ஏப்ரல் அன்று சீக் ரெஜிமென்ட் வீரர்களின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு காட்டுக்குள் பதுங்கிய PAFF பயங்கரவாதிகளை தேடும் வகையில் ஆபரேஷன் த்ரிநேத்ரா ஆரம்பம்.

10ஆவது நாளான நேற்று அதாவது 5 மே காலை 7.30 மணியளவில் கண்டி காட்டு பகுதியில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கபடுகின்றனர், அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சண்டை துவங்கியது.

இடையே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி ஒன்றை வெடிக்க செய்கின்றனர் அதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக 6 பேரும் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர், மருத்துவமனையில் வைத்து மேலும் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 5 பேரும் 9ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் ஆவர், நாகா ரெஜிமென்ட் வீரர்களை கொண்டு 60 RR படையணியை சேர்ந்த வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் நேற்று இரவு 1.15 மணியளவில் பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றதை அடுத்து மீண்டும் துப்பாக்கி சண்டை துவங்கியது, இன்று காலை 5 மணியளவில் சிறிய மாற்றத்துடன் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.