நிறைவடைந்தது ஆபரேசன் காவேரி- சூடானில் இருந்து வெற்றிகரமாக இந்தியர்கள் மீட்பு

“ஆபரேஷன் காவேரி”, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடான சூடானில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வர இந்தியா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

சூடானை விட்டு வெளியேற விரும்பிய அனைத்து குடிமக்களையும் இந்திய ஆயுதப்படைகள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளன. இந்திய கடற்படை மற்றும் விமானப்படையால் வெளியேற்றப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 3,862 ஆக உள்ளது.

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை காலை 47 இந்தியர்களுடன் இறுதி C130 விமானம் வந்ததை உறுதிப்படுத்தினார். சம்பந்தப்பட்ட அனைத்து வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

5 இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் 17 இந்திய விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தி சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு “ஆபரேஷன் காவேரி” தொடங்கி ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.