குவாட் குழுவில் புதிய நாடுகளை இணைக்க மறுத்த அமெரிக்கா- காரணம் என்ன ?

  • Tamil Defense
  • May 2, 2023
  • Comments Off on குவாட் குழுவில் புதிய நாடுகளை இணைக்க மறுத்த அமெரிக்கா- காரணம் என்ன ?

இந்த வருடம் குவாட் நாடுகளின் தலைவர்கள் ஆஸ்திரேலியாவில் சந்தித்துப் பேச உள்ளனர்.இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னர் செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, இந்த நேரத்தில் குவாட் நாடுகள் குழுவில் புதிய நாடுகளை சேர்க்கும் எண்ணமில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க தலைவர் பைடன் மற்றும் ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோர் வரும் ஜீன் 24ம் தேதி ஆஸ்திரேலியாவில் சந்தித்து பேச உள்ளனர்.

குவாட் நாடுகளின் குழு தற்போது தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தால் புதிய நாடுகளை இணைக்கும் எண்ணம் தற்போது இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.தற்போது இந்த குழுவை வலுப்படுத்துவது மட்டுமே தங்களது குறிக்கோளாக இருக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.

ஆனால் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து குவாட் நாடுகள் பணிபுரிய முன்வந்துள்ளன என அமெரிக்கா கூறியுள்ளது.

குவாட் நாடுகளின் தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச உள்ளனர்.