324 இடங்களில் NIA அதிரடி சோதனை !!
1 min read

324 இடங்களில் NIA அதிரடி சோதனை !!

NIA National Investigation Agency எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஆபரேஷன் தவாஸ்த் என்ற பெயரில் சுமார் 324 இடங்களில் அந்தந்த பகுதி காவல்துறையினர் உதவியோடு சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனைகளில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களும் அவற்றிற்கான குண்டுகளும் மற்றும் பல்வேறு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த சோதனைகள் போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத கூட்டு கும்பல் தொடர்பான வழக்கில் நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

60 மொபைல் ஃபோன்கள், 5 DVR, 20 சிம் கார்டுகள், 1 ஹார்ட் டிஸ்க், 1 பென் ட்ரைவ், 1 டாங்கிள், 1 வைஃபஃ ரவுட்டர், ஒரு டிஜிட்டல் கை கடிகாரம், 2 மெமரி கார்டுகள், 75 ஆவணங்கள் மற்றும் ரூ.39,60,000 பணமும் கைபற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வெளிநாடுகளில் உள்ள தலைவர்களால் வழிநடத்தப்படுவதாகவும், சிறைகளில் இதன் காரணமாக குழு மோதல்கள் ஏற்படுவதாகவும், சமீபத்தில் திஹார் மற்றும் கோயிந்த்வால் சிறைகளில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் மரணங்கள் காரணமாக சுட்டி காட்டப்படுவதும் கூடுதல் தகவல் ஆகும்.