
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகரத்தில் அமைந்துள்ள வங்கதேச கடற்படையின் முதலாவது நீர்மூழ்கி கப்பல் தளமான BNS Sheikh Hasina ஷேக் ஹசினா.
வங்கதேசத்திற்கு நீர்மூழ்கிகளை இயக்கிய அனுபவம் இல்லாத காரணத்தால் சீனா உதவியுடன் இந்த தளம் கட்டப்பட்டது, தற்போது புதுப்பிக்கப்பட்ட இரண்டு சீன மிங் ரக நீர்மூழ்கிகளை வங்கதேச கடற்படை இந்த தளத்தில் இருந்து தான் இயக்கி வருகிறது.
இந்த தளத்தில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் எட்டு போர் கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.