Breaking News

மர்மகோவா கப்பலில் இருந்து வெற்றிகரமாக MRSAM ஏவுகணை சோதனை !!

  • Tamil Defense
  • May 26, 2023
  • Comments Off on மர்மகோவா கப்பலில் இருந்து வெற்றிகரமாக MRSAM ஏவுகணை சோதனை !!

இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் ரகத்தின் புத்தம் புதிய ஸ்டெல்த் நாசகாரி கப்பலான INS Murmugoa மர்மகோவா கப்பலில் இருந்து வெற்றிகரமாக MRSAM ஏவுகணை ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த MRSAM – Medium Range Surface to Air Missile எனப்படும் நடுத்தர தொலைவு வான் பாதுகாப்பு ஏவுகணை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று INS Murmugoa நாசகாரி போர் கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளனர்.

கப்பலை தாக்க வரும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொதுவாக மிகவும் தாழ்ந்து கடலின் மேற்பகுதியை ஒட்டி சூப்பர்சானிக் வேகத்தில் பறந்து வரும் இந்த சோதனையின் போது இத்தகைய இலக்கை மேற்குறிப்பிட்ட ஏவுகணை இடைமறித்து அழித்துள்ளது.

இந்த MRSAM ஏவுகணையானது இந்திய (DRDO) – இஸ்ரேல் (IAI) கூட்டு தயாரிப்பில் உருவான Barak – 8 பராக்-8 ஏவுகணையாகும், இந்தியாவில் இதனை BDL – Bharat Dynamics Limited பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த சோதனையின் மூலமாக இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்திய கடற்படையின் திறன் வலுவடைந்து இருப்பதாகவும், பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அதிகமாகும் எனவும் கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாத்வால் தெரிவித்தார்.