2022 ஆண்டு 15 நாடுகளின் ராணுவ செலவீடு உக்ரைன் போர் ஏற்படுத்திய வரலாறு காணாத மாற்றம்!!

  • Tamil Defense
  • May 19, 2023
  • Comments Off on 2022 ஆண்டு 15 நாடுகளின் ராணுவ செலவீடு உக்ரைன் போர் ஏற்படுத்திய வரலாறு காணாத மாற்றம்!!

1) அமெரிக்கா – 877 பில்லியன் டாலர்கள்

2) சீனா – 292 பில்லியன் டாலர்கள்

3) ரஷ்யா – 86 பில்லியன் டாலர்கள்

4) இந்தியா – 81 பில்லியன் டாலர்கள்

5) சவுதி அரேபியா – 75பில்லியன் டாலர்கள்

6) இங்கிலாந்து – 69 பில்லியன் டாலர்கள்

7) ஜெர்மனி – 56 பில்லியன் டாலர்கள்

8) ஃபிரான்ஸ் – 54 பில்லியன் டாலர்கள்

9) ஜப்பான் – 46 பில்லியன் டாலர்கள்

10) தென் கொரியா – 46 பில்லியன் டாலர்கள்

11) உக்ரைன் – 44 பில்லியன் டாலர்கள்

12) இத்தாலி – 33 பில்லியன் டாலர்கள்

13) ஆஸ்திரேலியா – 32.2 பில்லியன் டாலர்கள்

14) கனடா – 26.9 பில்லியன் டாலர்கள்

15) இஸ்ரேல் – 23.4 பில்லியன் டாலர்கள்

இதில் 2021ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த ரஷ்யா 2022ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது, 2021ல் ரஷ்யாவின் ஜிடிபியில் 3.7% ஆக இருந்த பாதுகாப்பு செலவீடு 2022ஆம் 4.1% ஆக அதிகரித்துள்ளது, அதாவது 65 பில்லியன் டாலர்களில் இருந்து 86 பில்லியன் டாலர்களாக அதிகரித்து உள்ளது 2021ஐ ஒப்பிடுகையில் இது 9.2% உயர்வாகும்.

அதே நேரத்தில் உக்ரைனின் பாதுகாப்பு செலவீடு 2022ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர்களாக உள்ளது ஆனால் 2021ஆம் ஆண்டு உக்ரைனுடைய பாதுகாப்பு பட்ஜெட் வெறுமனே 5.94 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது.

இது 2021ஐ ஒப்பிடுகையில் சுமார் 650% உயர்வாகும், இது உலக வரலாற்றில் ஒரு நாடு ஒரே ஆண்டில் பாதுகாப்பு பட்ஜெட்டை இந்தளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும் மேலும் 2021 உக்ரைனுடைய ஜிடிபியில் பாதுகாப்பு செலவீடு வெறுமனே 3.2% ஆக இருந்தது 2022ல் அது 34% ஆக அதிகரித்துள்ளது

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறும் போர் இரு நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்டுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது இன்னும் சொல்லப்போனால் தெறிக்க விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதே போல் ஒட்டுமொத்த உலகளாவிய ராணுவ செலவீடு இதுவரை இல்லாத அளவுக்கு 3.7% வளர்ச்சியுடன் 2240 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது, 2021ல் இது 0.7% வளர்ச்சியுடன் 2113 பில்லியன் டாலர்களாக இருந்தது, இந்த வளர்ச்சிக்கு காரணம் ரஷ்யா உக்ரைன் போர், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதட்ட நிலைகளாகும்.

குறிப்பாக ஐரோப்பாவின் பாதுகாப்பு செலவீடு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது, அதுவும் ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் போலந்து லித்துவேனியா உக்ரைன் எஸ்டோனியா லாத்வியா ஃபின்லாந்து போன்ற நேட்டோ மற்றும் அருகாமையில் உள்ள இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு செலவீனம் விண்ணை தொட்டுள்ளது என கூறினால் சரியாக இருக்கும்.